பிட்காயின் என்றால் என்ன

பிட்காயின் என்பது இப்போதைய டிஜிட்டல் உலகின் கரன்சியாகும். முதல்முறையாக உபயோகிக்க தொடங்குபவர்கள் அதைப் பற்றி அறிந்து கொள்வது நல்லது. டிஜிட்டல் கரன்சி என்பது நாம் அன்றாடம் பயன்படுத்தும் காகிதப் பணம் மற்றும் அதன் வழிமுறைகளிலிருந்து வேறுபட்டதாகும். நாம் பயன்படுத்தும் பணம் தராத மூன்று வசதிகளை பிட்காயின் தருகிறது. ஒன்று-, பொதுவுடைமை ஆக்கப்பட்ட கரன்சி, இரண்டு – வெளிப்படைத் தன்மை கொண்டது, மூன்று – மக்கள் உலகின் எந்த மூலையிலுள்ளவர்க்கும் ஒருவருக்கொருவர் நேரடியாக கொடுத்து வாங்கும் வசதி உள்ளது (நடுவில் எந்த வங்கியோ அல்லது தரகரோ தேவையில்லை.

பிட்காயின் என்றால் என்ன

பிட்காயினில் முதலீடு செய்யும்முன் அல்லது ஒரு பிட்காயின் வாலட் தொடங்கும்முன் அதைப் பற்றி தெரிந்துகொள்வது அவசியம். (கவனியுங்கள்…. பிட்காயின் வாலட் என்றுதான் சொல்லப்படுமே ஒழிய பிட்காயின் அக்கவுண்ட் என்று சொல்லப்படாது. வாலட் என்றால் பர்ஸ் என்ற பொருள் தரும். எனவே அது உங்கள் பர்ஸில் உள்ள பணம் போன்றதே.) கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய என்றாலும் உங்களால் முடியும். ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் – பிட்காயின் என்பது உலகில் பெரும்புரட்சியை ஏற்படுத்த வல்லது.