பிட்காயின் என்பது என்ன? ஏன் முக்கியம்?

பிட்காயின் என்பது என்ன? ஏன் முக்கியம்?

பிட்காயின் கண்டுபிடித்தவர் சடோஷி நாகமோட்டோ என்பவர் ஆவார். இவர் “ஒருவருக்கொருவர் நேரடியாக கொடுத்து வாங்கக் கூடிய மின்னணு பணம்” என்று இதை வர்ணிக்கிறார். (தனது பிட்காயின் கண்டுபிடிப்பு பற்றிய அவரது 2009ஆம் ஆண்டு குறிப்பில் இவ்வாறு கூறியுள்ளார்.) இன்றுவரை அது மிகச் சரியான கூற்றாகவே உள்ளது.

பணத்தை ஒருவர் நேரடியாக மற்றவருக்கு அனுப்பமுடியும். பயன்படுத்துபவரைப் பொறுத்த அளவில் இதை “இணையப் பயன்பாட்டிற்கான பணம்” என்று கூறலாம். அதேநேரத்தில் மூன்றடுக்கு பதிவேட்டுப் பராமரிப்பு (Triple-entry book keeping system) கொண்ட ஒரு நாணயமும் ஆகும்.

பிட்காயின் என்பது என்ன? ஏன் முக்கியம்?

இதை மின்னணு நாணயம், கிரிப்டோகரன்சி, உலகளாவிய பரிமாற்ற தளம், இணையத்திற்கான பணம் என்று பலவிதமாக அழைத்தாலும், இது ஒரு புரட்சியே. (பணம் என்பதை ஏதோ ஒரு அமைப்பு கட்டுப்படுத்தி வந்தது. இப்போது அந்தக் கட்டுப்படுத்தும் சக்தி அவரவர் கையில் கொடுக்கப்பட்டது ஒரு புரட்சியே. இப்போது புரியாவிட்டாலும் போகப்போக புரியும்.)

இந்த பரிமாற்றங்களை அங்கீகரிக்க ஒரு அமைப்பு தேவையில்லை என்பது இதன் சிறப்பாகும். நேரடியாக ஒருவரின் பர்ஸிலிருந்து இன்னொருவரின் பர்ஸ் (அதாவது வாலட்)-க்கு அனுப்பமுடியும். உடனடியாக முடிந்துவிடும்.

அனைத்து பிட்காயின் பரிமாற்றங்களும் “பிளாக்செயின் (BlockChain)” என்ற நிரந்தர பதிவேட்டில் பதியப்படும். இப்பதிவேட்டை “மைனர்கள்” (கவனிக்கவும் miners.. அதாவது சுரங்கம் தோண்டுபவர்கள்.) மற்றும் “நோடுகள்” (Nodes) ஆகியோர் மட்டும் பதிவுகள் செய்யக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டது. (பிட்காயின் மைனிங் என்பது சுரங்கம் தோண்டுதல் போன்றது, ஆனால் டிஜிட்டல் முறையில். சில பார்முலாக்கள் மற்றும் கணக்கீடுகள் கொண்டது. இந்த கணக்கீடுகளை செய்ய பல இடங்களில் உள்ள கணினிகள்தான் “நோடுகள்”. பார்முலாவின் உரிமையாளர்களாகிய தோண்டுபவர்களுக்கு மற்றும் அந்த நோடுகளின் உரிமையாளர்களுக்கு மட்டுமே கூலியாக பிட்காயின் புதிதாக கிடைக்கும். தற்போது 10 நிமிடத்திற்கு 12.5 பிட்காயின் என்ற விகிதத்தில் வழங்கப்படுகிறது. இதை அவர்கள் நோடுகளின் உரிமையாளர்களுக்கு விகிதப்படி பிரித்து அளிப்பார்கள். மற்ற பயனாளிகள் அதை பெற்று, அதன்பின் பயன்படுத்த உரிமை உள்ளது. மற்றபடி கரன்சி அச்சடிப்பதுபோல் புதிதாகவோ அல்லது போலியாகவோ பிட்காயின் உருவாக்க முடியாது.)

மேலும் 21 மில்லியன் பிட்காயின்கள் தான் உருவாக்க முடியும் என்று நிர்ணயிக்கப் பட்டுள்ளது. எனவே பிட்காயின் மதிப்பு வரும் நாட்களில் அதிகரிக்கவே செய்யும்.

1995 சமயத்தில் இணையத்தின் பயன்பாடு குறித்து பெரிய விழிப்புணர்வு இல்லை. ஆனால், அதன்பின் அதன் நுகர்வு மற்றும் வீச்சு பெரிய அளவில் உள்ளது. அதேபோல் இப்போது பிட்காயின் பற்றிய விழிப்புணர்வு பெரிய அளவில் இல்லை. ஆனாலும் அதன் பயன் தெரிந்தவர்கள் அனுபவித்து வருகின்றனர். (சில ஆண்டுகளுக்கு முன் 1 டாலருக்கும் கீழே இருந்த பிட்காயின் இன்று 2700 டாலருக்கு நிகராக உள்ளது.)

பொருளாதர நிபுணர்கள் மற்றும் தொழில் நுட்ப வல்லுநர்களைப் பொறுத்தவரையில் இன்னும் பிடிபடாத விஷயமாக இருக்கும் இந்த பிட்காயினின் பயன் வரும்காலத்தில் எவ்வாறு இருக்கும்? இது வெறும் கரன்சியின் டிஜிட்டல் வடிவம் மட்டும்தானா அல்லது பெரிய புத்திசாலித்தனமான வர்த்தகத்திற்கான அடித்தளமா? இது பணப் பரிமாற்றத்தை கட்டுப்படுத்தும் அரசுகளுக்கே சவால் விடும் அளவுக்கு வளருமா அல்லது கவனிக்கப்படாமல் போய்விடுமா? இந்தக் கேள்விகளுக்கு பதில் உங்களுக்கு தெரியுமானால் அல்லது உங்களால் ஊகிக்க முடிந்தால் ஒரு பெரிய வாய்ப்பு உங்களுக்கு காத்திருக்கிறது

உங்களின் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *