பிட்காயின் ப்ளாக்செயின் என்பது என்ன?

பிட்காயின் ப்ளாக்செயின் என்பது என்ன?

ப்ளாக்செயின் என்பது அடிப்படையில் ஒரு பதிவேடாகும். பிட்காயின் உலகின் முதுகெலும்பு போன்றது. பிட்காயின் உருவாக்கம், பரிமாற்றம் ஆகிய அனைத்து பிட்காயின் நடவடிக்கைகளும் இந்தப் பதிவேட்டில் ஏற்றப்படுகின்றன. பிட்காயின் மைனர்கள், நோடுகள், பயனாளர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒரு சிஸ்டமாகும். ஒவ்வொரு பரிமாற்றத்தையும் மைனர்கள் (miners) சரிபார்த்து, நேரவரிசைப்படி இப்பதிவேட்டில் பதிவு செய்வார்கள்.

இது வேலை செய்யும் விதம்: மைனர்கள் தங்களிடமுள்ள சிறப்புக் கணினி மற்றும் இதர பயனர்களின் கணினி மூலம் ஒரு புதிருக்கான தீர்வைக் கண்டுபிடிப்பார்கள். அவ்வாறு ஒரு புதிர் தீர்க்கப்பட்டதும் அவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு பிட்காயின் கிடைக்கும். அத்துடன் ப்ளாக்செயின் எனப்படும் பரிமாற்றச் சங்கிலியில் ஒரு வளையம் சேர்க்கப்படும். ஒரு வளையம் சேர்க்கப்பட்ட தும் சங்கிலி மீண்டும் சுழலத் தொடங்கும், புதிய புதிர்கள் உருவாகும், மைனர்கள் (miners) மீண்டும் அவற்றுக்கான தீர்வுகளை கண்டறியத் தொடங்குவார்கள்.
பிட்காயின் ப்ளாக்செயின் என்பது என்ன?

இந்த ப்ளாக்செயினில் உள்ள பதிவுகளை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். (ஆனால் நபர்களின் தகவல்கள் ரகசியம்.) சங்கிலித் தொடர் போல் பதிவுகள் இடம் பெறுவதால் ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டே போனால் முதன்முதலில் நடைபெற்ற பிட்காயின் பரிமாற்றம் கூட பார்க்க முடியும்.

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Pleas share this site